• Sat. Sep 23rd, 2023

காபூலில் குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி; பலர் காயம்

Aug 26, 2021

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.

மேலும் இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.