• Mon. Nov 18th, 2024

ரஷ்யாவின் விமானத்தை சிறை பிடித்த பிரித்தானியா

Apr 2, 2022

ரஷ்யாவுடன் தொடர்புடைய ஜெட் விமானத்தை பறக்க விடாமல் பிரித்தானியா அதிகாரிகள் தடுத்து சிறை பிடித்துள்ளதாக நாட்டின் போக்குவரத்துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். லண்டன் Luton விமான நிலையத்திலிருந்த குறித்த ஜெட் விமானத்தை, அங்கிருந்து புறப்பட விடாமல் பிரித்தானியா போக்குவரத்து அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

மேலும், ரஷ்யாவுடன் தொடர்புடைய விமானங்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள தடையை குறித்த ஜெட் மீறியதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த விமானம் ரஷ்ய தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

எனினும், விசாரணை நடைபெற்று வருவதால், ஜெட் உரிமையாளரின் பெயரை பிரித்தானியா அதிகாரிகள் வெளியிடவில்லை.

இதுகுறித்து பிரித்தானியா போக்குவரத்து துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இன்று காலை ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான மற்றொரு ஜெட் பிரித்தானியா வான்வெளியில் பறக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பிரித்தானியா ஏவுகணை! வெளியான வீடியோ ஆதாரம்

அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தும் போது, புடினால் கோடி கோடிகளை குவித்தவர்கள் சொகுசாக வாழ்வதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என கிராண்ட ஷாப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது பிரித்தானியா உட்பட மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரஷ்ய தொழிலபருக்கு சொந்தமான 2 தனியார் ஜெட் விமானங்கள் பிரித்தானியாவில் சிறைபிடிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.