• Thu. Nov 21st, 2024

ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்த சீனா

Sep 10, 2021

ஆப்கானிஸ்தானுக்கு உணவு பொருட்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உட்பட 200 மில்லியன் யுவான் (31 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான உதவிகளை அளிக்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது.

பெய்ஜிங், தலிபான் அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பராமரிக்கத் தயாராக இருப்பதாக கூறிய நிலையில், இந்த உதவி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவது ஆப்கானிஸ்தானில் ஒழுங்கை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை என்று சீனா கூறியது.

அண்டை நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாநாட்டில் பங்கேற்ற சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் ஈரான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன.

இந்த மாநாட்டில் புதிய தலிபான் அரசாங்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்த வாங் யீ, ஆப்கனிஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு தலிபான்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகப் பாராட்டு தெரிவித்தார்.