• Mon. May 29th, 2023

குண்டான மனிதர்களை வாடகைக்கு விடும் நிறுவனம்!

Jun 8, 2021

ஜப்பானைச் சேர்ந்த டெபுகாரி என்ற நிறுவனம் குண்டான மனிதர்களை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மூலம் தனி நபர்களோ அல்லது நிறுவனமோ குண்டான மனிதர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

குண்டாக இருப்பவர்களைப் பார்த்து தம்மைப் பற்றி சிறப்பாக உணர்வதற்காகவும், உணவு விழிப்புணர்வுக்காகவும் அவர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

அதற்காக வாடகைக்கு செல்லும் மனிதர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு இந்திய மதிப்பில் 1300 ரூபாய் கொடுக்க வேண்டுமாம்.

அத்துடன் , 100 கிலோவுக்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த நிறுவனத்தில் தங்களை பதிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.