ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள கடவுசீட்டுஅலுவலகத்தில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக பெருமளவில் திரண்டுள்ளனர்.
பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக தலிபான்கள் தடியடி பிரயோகத்தை மேற்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
நான் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வந்தேன் ஆனால் இங்கு பல பிரச்சினைகள் உள்ளன, என ஒருவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் கேள்விகளிற்கு பதலளிக்க எவரும்இங்கு இல்லை மக்கள் குழப்பமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே வரட்சி மற்றும் கொவிட்டினால்பாதிக்கப்பட்டிருந்த ஆப்கானில் தலிபான் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் வறுமையும் பட்டினியும் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் அரை மில்லியனிற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளஐநா சுகாதார சேவைகள் கல்வி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால்இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது.
கடவுச்சீட்டுவழங்கும் நடவடிக்கைகள்ஞாயிற்றுக்கிழமையே ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று பெருமளவு மக்கள் கடவுச்சீட்டு அலுவலகத்தில்திரண்டனர்.
ஆவணங்களை கையளிப்பதற்காக மக்கள் முண்டியடித்தது அமெரிக்க படையினர் வெளியேறிய பின்னர் காபுல்விமானநிலையத்தில் காணப்பட்ட காட்சிகளை நினைவுபடுத்தியது.
அதிகாரிகள் பொதுமக்களை சனிக்கிழமை வருமாறு கேட்டுக்கொண்டனர்.
நான் இங்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வந்தேன் ஆனால் பெற முடியவில்லை இவ்வாறான சூழ்நிலையி;ல என்ன செய்வது என்பது தெரியவில்லை என அகமட் சாஹிப் சித்தீக் தெரிவித்தார்.
எதிர்காலத்தில்பொருளாதார நிலை மோசமாகயிருக்கும் என்ற எதிர்வுகூறல்களால்நாட்டை விட்டு வெளியேற முயல்வதாக அவர் தெரிவித்தார்.
வேலை எதுவுமில்லை பொருளாதார நிலை சரியில்லை நான் எனது பிள்ளைகளிற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.
இதற்காக ஆப்கானிலிருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்றும் நாங்கள் ஆப்கானிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.