• Sat. Jul 20th, 2024

தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் உச்சமடையும் கொரோனா

Jun 12, 2021

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் இதுவரை 1.7% மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது