• Sun. Oct 27th, 2024

ஒருங்கிணைந்து செயற்பட முடிவு

Dec 22, 2021

தமிழ்மரபு திங்களுக்கான பிரித்தானிய அரச பேரறிவிப்பினைப் பெறும் நோக்கத்துடன் தமிழ் மரபுத் திங்கள் செயல்பாட்டுக் குழுவினருக்கும் இலண்டன் மற்றும் இலண்டன் பெரும்பாக நகராட்சி மன்றங்களைச் சேர்ந்த தமிழ் நகராட்சிமன்ற உறுப்பினர்களுக்குமிடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று ( 17.12.2021)மெய்நிகர் (zoom ) வழியிலான கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் தமிழ் மரபுத் திங்கள் செயல்பாட்டுக் குழுவினர் பிரித்தானியாவில் தமிழரின் மரபுத் திங்கள் நிகழ்வு கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் தமிழ் மரபுத்திங்களுக்கான அரசஆணை ஒன்றினைப் பெறும் நோக்குடன் கடந்த 3 வருடங்களாக தாம் முன்னெடுத்துவருகின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மற்றும் பணிகள் பற்றிய விளக்கமளித்தனர். மேலும் தமிழ்மரபு திங்களுக்கு அரசஆணை ஒன்றைப் பெறுவதற்கு முன்னர் பிரித்தானிய நகராட்சி மன்றங்கள் தத்தமது நகராட்சிகளில் தமிழ்மரபு திங்கள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் தேவைப்பாடு ஏன் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது . இக்காத்திரமான கலந்துடையாடலில் இணைந்த செயல்திட்டங்களுக்கான இணைக்கப்பாட்டினை நகரட்சிமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் .

தமிழ் மரபுத்திங்கள் செயல்திட்டத்தின் குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்ல தமது ஒத்துழைப்பினை வழங்குதுடன், தமிழ் மரபுத்திங்கள் செயல்திட்டத்துக்கான அரச ஆணையை பெறும் வகையில் நகராட்சி மன்றங்களில் தீர்மானம் கொண்டுவரும் செயல்திட்டத்தில் தமிழ்மரபு செயற்பாட்டுக் குழுவினருடன் தாம் சார்ந்த கட்சி மற்றும் அரசியல் வேறுபாடுகளை கடந்து ஒருங்கிணைந்து செயல்படுதல் என்பனவாகும்.