• Mon. Jan 13th, 2025

யூரோ 2020 – இங்கிலாந்தின் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் கைது

Jul 9, 2021

புதன்கிழமை நடந்த யூரோ 2020 அரையிறுதியில் டென்மார்க்கை எதிர்த்து இங்கிலாந்தின் 2-1 என்ற வெற்றியைக் கொண்டாட ரசிகர்கள் லண்டனில் கூடியிருந்த நிலையில் அவர்களில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1966 உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் நாடு முதல் பெரிய இறுதிப் போட்டியை எட்டியதை ரசிகர்கள் லண்டனின் பெரும் தெருக்களில் கொண்டாடினர்.

மத்திய லண்டனில் உள்ள பிக்காடில்லி சர்க்கஸில் ரசிகர்கள் வீதிகளின் போக்குவரத்துக்களை தடுத்து தொலைபேசி பெட்டிகளுக்கு சேதம் விளைத்த வேளையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

“பொதுச் சொத்துக்கு சேதம், பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.