• Tue. Jul 23rd, 2024

பிலிப்பைன்ஸில் பத்து நாடுகளுக்கான பயணத் தடை நீடிப்பு

Aug 13, 2021

டெல்டா வைரஸ் அதிகம் பரவும் கவலைகள் காரணமாக பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையினை ஆகஸ்ட் இறுதி வரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது.

இந்த தகவலை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் இன்று உறுதிபடுத்தினார்.

ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க கொரோனா வைரஸ் பணிக்குழுவின் பரிந்துரையை ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே அங்கீகரித்தார் என்று ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் ஹாரி ரோக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஏப்ரல் 27 அன்று முதன்முதலில் விதிக்கப்பட்ட பயணத் தடை, பல முறை நீட்டிக்கப்பட்டது.

இந்த பயணத் தடை பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேஷியாவை உள்ளடக்கியது.

பிலிப்பைன்ஸில் உள்ள அதிகாரிகள் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் போராடுகின்றனர்.

இந்நிலையிலேயே பிலிப்பைன்ஸ் அரசு பயணத் தடையினை நீட்டித்துள்ளது.