ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கும் மக்களுக்கு $4,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஆஸ்திரியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பியாவில் குறைவான அளவு தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரியா முன்னணியில் உள்ளது.
அந்நாட்டில் 68 சதவிகிதத்தினர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நிலையில் கர்ப்பிணிகள் மற்றும் உடல் சிக்கல் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்துவதில் இருந்து மருத்துவக் காரணங்களுக்காக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.