• Sun. Oct 13th, 2024

காபூல் விமான நிலையம் மீது ஐந்து ஏவுகணைகள் வீச்சு!

Aug 30, 2021

காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்று குடியிருப்பு பகுதியை தாக்கியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட் ஏவுகணைகள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அந்த முயற்சியை அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை இந்த ராக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை.

கபர்கானே லேப் பகுதியில் இருந்து காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ஏவுகணைகள் வீசப்பட்டதில் அவற்றில் ஒன்று குடியிருப்பு பகுதியை தாக்கியது.

ஏவுகணைகள் விமான நிலையத்தில் பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டன.

காபூல் விமான நிலையம் மீது அடுத்தடுத்து 5 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் காபூல் விமான நிலையம் மீதான ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.