• Fri. Jul 26th, 2024

உலகளவிலான உணவுப் பொருள்களின் விலைகள் உயரக்கூடும் – புதின்

Mar 12, 2022

உலகளாவிய உர உற்பத்தி நாடான ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தினால் உலகளவிலான உணவுப் பொருள்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார ரீதியான தடைகளை விதித்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் ரஷ்யாவுக்கான தங்களது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், ரஷ்ய மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளால் உலகளவிலான உணவுப் பொருள்களின் விலை உயரக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி புதின் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஷ்ய முக்கிய அரசுத்துறை அதிகாரிகளுடான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய புதின், ரஷ்யா மீதான பொருளாதார ரீதியான தடைகள் சட்டவிரோதமானது. மேற்கத்திய நாடுகள் தங்கள் மக்களை ஏமாற்றுவதாகவும், பொருளாதாரத் தடையால் ஏற்படும் பிரச்னைகளை ரஷ்யா அமைதியாக தீர்க்கும்.

ரஷ்ய உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய உர உற்பத்தியாளரான ரஷ்யா, உலகளாவிய விவசாயச் சந்தைகளுக்கான ஏற்றுமதி சேவையை ரஷ்யா தொடர்ந்து செய்யும். எரிவாயு வினியோகம் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

மேலும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்து பெரும்பாலான உரம் மற்றும் வளங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் விரைவில் உலகளவிலான உணப்பொருள்கள் மற்றும் இறுதிக் கட்ட பணிகளுக்கு தேவையான பொருள்களின் விலை உயரும் என்று புதின் எச்சரித்துள்ளார்.