பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது.
இந்நிலையில், முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது 21 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக கார்களுக்குள் பயணிகள் சிக்கிக்கொண்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.