• Thu. Apr 18th, 2024

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க முயற்சித்தால் அமெரிக்கா தீர்க்கமாக பதிலடி கொடுக்கும்

Jan 4, 2022

ரஷ்யா தனது மேற்கத்திய சார்பு அண்டை நாடு மீது படையெடுக்க முயற்சித்தால், வொஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் தீர்மானமாக பதிலளிப்பார்கள் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை(02) உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைப்பேசி உரையாடலின் போது உறுதியளித்தார்.

உக்ரைனுடனான ரஷ்யாவின் எல்லையில் பதற்றங்களுக்கு மத்தியில் பைடன் ஒரு மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரண்டாவது உரையாடலை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்து வெளிவந்துள்ளது.

ஜனவரி 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் ஜெனீவாவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய உயர் அதிகாரிகள் நெருக்கடி குறித்து விவாதிக்க உள்ளனர்.

ரஷ்யா- நேட்டோ சபையில் பேச்சுவார்த்தை மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டமும் நடைபெற உள்ளது.

அந்த சந்திப்புகளுக்கு முன்னர் ரஷ்யர்கள் நெருக்கடியைத் தணிக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று புடினிடம் கூறியதாக பைடன் கூறியுள்ளார்.