
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் (Irkutsk) நகரில் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக ரஷ்யாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இர்குட்ஸ்க் (Irkutsk) நகரில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 40,251 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
பிறந்த குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் சிறுவர்களுக்கான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.