• Mon. Dec 2nd, 2024

உலகளவில் 18 கோடியை நெருங்கும் தொற்று

Jun 21, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17.92 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 179,252,416 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் 3,882,008 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், 163,805,325 பேர் மீண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 11,565,083 சிகிச்சை பெற்று வருகின்றனர்.