• Thu. Nov 30th, 2023

தலையில் பேண்டேஜ் ஒட்டியிருந்த கிம்; கிளம்பிய சர்ச்சை

Aug 3, 2021

வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்து தேசிய புலனாய்வு தகவல் வெளியிட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் கடந்த சில நாட்களுக்கு முன் ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது அவரின் தலையில் பின்புறத்தில் பேண்ட்-எய்ட் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் வடகொரிய தலைவர் தலையில் பேண்டேஜ் ஒட்டபட்டிருந்தாலும் அவருக்கு உடல்நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என தென் கொரியா தேசிய புலனாய்வு அமைப்பகம் அறிவித்துள்ளது.