தென்னாபிரிக்காவில் எரிந்துகொண்டிருந்த கட்டிடமொன்றிலிருந்து குழந்தையை தாய் தூக்கி வீசும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
தென்னாபிரிக்காவின் டேர்பனில் எரிந்துகொண்டிருக்கும் கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து தாய் குழந்தையை கீழே வீசுகின்றார். எனினும் சம்பவத்தின் பின்னர் தாயும் குழந்தையும் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னாபிரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மோசமான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 72 இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரை அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது.
மேலும் முன்னாள் ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள 15 மாத சிறைத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளதை தொடர்ந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்.