• Tue. Nov 28th, 2023

உள் அரங்கங்களில் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை – இஸ்ரேல்

Jun 8, 2021

கொரோனா வைரசிலிருந்து நம்மைப் பாதுகாக்க முகக்கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் உள் அரங்கங்களில் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், 16 வயதிற்கு மேற்பட்ட 81 சதவீத பேருக்கு 2 தவணையும் கொரோனா தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.