• Tue. Dec 3rd, 2024

அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் – அமெரிக்காவை அச்சுறுத்தும் வடகொரியா

Aug 10, 2021

அமெரிக்காவும், தென் கொரியாவும் இராணுவ பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் நேற்று(09) தெரிவித்தது.

அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்தும் இராணுவ கூட்டுப் பயிற்சிகளுக்காக இன்னும் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரியா கடும் எச்சரிக்கை செய்துள்ளது.

இந்நிலையில் இந்த பயிற்சிகள் வட கொரிய மக்களை அச்சுறுத்தும் மற்றும் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும்.

மேலும் இது விரும்பத்தகாத, சுய அழிவு நடவடிக்கை என்று வடகொரியாவின் சக்திவாய்ந்த அதிகாரியும், ஜனாதிபதி கிம் யொங் உன்னின் சகோதரியுமான கிம் யோ யொங் கொரிய மத்திய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இது மட்டுமன்றி அமெரிக்கா, தென் கொரியா ஆபத்தான போர் பயிற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான எங்கள் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை புறக்கணிப்பதன் மூலம் மிகவும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.