வட கொரியா நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளார்.
வட கொரியா நாட்டில் அவ்வப்போது புதுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் வட கொரிய அதிபர் திடீரென ஒரு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி வட கொரிய நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என்றும் வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் 11 நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்றும் மது அருந்துவது, பிறந்தநாள் கொண்டாடுவது உள்ளிட்ட எந்த கொண்டாட்டமும் நாடு முழுவதும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.