• Fri. Apr 19th, 2024

பிரித்தானியாவில் கருப்பினத்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய பொலிஸ்

Jul 16, 2021

பிரித்தானியாவில் வெள்ளை நிற பொலிஸ் அதிகாரி, கருப்பினத்தவர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.

பிரித்தானியாவின் Wales-ல் இருக்கும் Newport பகுதியில், இருக்கும் குடியிருப்பின் பின்னாள் இருக்கும் தோட்டப் பகுதியில் கடந்த 9-ஆம் திகதி, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் பொலிசார் ஒருவர், 41 வயது மதிக்கத்தக்க கருப்பினத்தவர் ஒருவரை தாக்குகிறார்.

அப்போது அங்கிருக்கும் பெண் ஒருவர் இதை வீடியோவாக எடுத்துக் கொண்டே, அவரை விட்டு விடுங்கள், என் குழந்தைகள் அலறுகிறார்கள், நீங்கள் பயமுறுத்துகிறீர்கள் என்று கெஞ்சுகிறார்.

நான் உங்கள் மீது புகார் செய்வேன், இது ஒரு அபத்தமான நடத்தை என்று கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட 24 மணி நேரத்திற்கு பல ஆயிரம் கணக்கான மக்கள் பார்த்தால், பொலிசாரை பலரும் கடும் விமர்சனம் செய்தனர்.

இதற்கு பொலிஸ் தரப்பில் இருந்து, அவர் அவசர கால ஊழியர் ஒருவரை தாக்கியதன் காரணமாக, சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளதாக மட்டுமே கூறப்பட்டிருந்தது.

அவரை தாக்கியதற்கான காரணம் என்ன என்பது கூறப்படமால் இருந்தது.

இதையடுத்து, Gwent பொலிசின் தலைமை கண்காணிப்பாளர் Tom Harding இது குறித்து கூறுகையில், கடந்த 9-ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை Newport பகுதியில், 41 வயது மதிக்கத்தக்க நபர் வாகனம் ஓட்டுவதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதும், அவர் வாகனத்தை ஓட்டினார்.

அதுமட்டுமின்றி, அவர் அந்த வாகனத்திற்கு ஊரிய காப்பீடு இல்லை, இதைத் தொடர்ந்து அவர் அவசரகால ஊழியர் ஒருவரையும் தாக்கியதால், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய முற்பட்ட போது, அவர் கடமையை செய்வதில் தடுத்ததால், இந்த சம்பவம் நடந்ததாகவும், அதன் பின் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.