![](https://tamil4.com/wp-content/uploads/2021/08/ashraf-kani.jpg)
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு உலங்கு வானூர்தி மூலம் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின.
அஷ்ரப் கனி தற்போது ஓமன் நாட்டில் இருப்பதாகவும் அவர் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்திருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.