• Sun. Jan 26th, 2025

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்!

Dec 30, 2021

சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் கோவிட் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு தடையாகவே அமைந்துவருகிறது.

டிசம்பர் 20 முதல் தனியார் கூட்டங்களில் கடுமையான விதிகள் பயன்படுத்தப்பட்ட அதே நேரத்தில், வெளிப்புற கொண்டாட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன. சில முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அண்டை நாடான ஜேர்மனியும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

கோவிட் காரணமாக வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சூரிச், பாஸல், இன்டர்லேக்கன், ப்ரூனென், அஸ்கோனா, ரைன்ஃபெல்டன் மற்றும் லூசர்ன் ஆகிய இடங்களில் பட்டாசு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூரிச்சில் உள்ள அதிகாரிகள் சில கட்டிடங்கள் ஒளிரும் என்று உறுதியளித்துள்ளனர். அதே நேரத்தில் இண்டர்லேக்கனும் பட்டாசு இல்லாமல் ஒரு சிறிய விழாவை நடத்துவதாக உறுதியளித்துள்ளது.

மாநிலங்கள் அடிப்படையில் தடைகள் வந்துள்ளதால், நாட்டின் சில பகுதிகளில் இன்னும் வானவேடிக்கைகள் நடத்தப்படும்.

Fribourg-க்கு தெற்கே உள்ள Elm மற்றும் Schwarzsee ஆகிய இடங்களில் இன்னும் பட்டாசு காட்சிகள் நடைபெறும் என்று சுவிட்சர்லாந்தின் Watson செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜேர்மனியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்து தடை விதிக்கவில்லை.

சுவிட்சர்லாந்தில் பட்டாசுகளை வாங்குவது அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் தடை செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் பட்டாசுகளை தடை செய்ய அல்லது அனுமதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளது.

அப்படி இருக்கும் நிலையில், கூட்டங்கள் மீதான கூட்டாட்சி வரம்புகள் மதிக்கப்பட வேண்டும் என்றாலும், பட்டாசுகளைப் பயன்படுத்துவதில் பரவலான தடைகளை விதிக்க சில மாநிலங்கள் மறுத்துவிட்டன.