யுக்ரைனின் மரியபோலில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள போதிலும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மரியபோலின் பிரதி முதல்வர் தெரிவித்துள்ளார்.
மக்களை வெளியேற்றும் பாதையில் தாக்குதல் நடத்தப்படுவதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்கள் வெளியேறும் பாதையில் தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பில் யுக்ரைன் அதிகாரிகள் ரஷ்ய தரப்பினருடன் கலந்துரையாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுக்ரைனின் மரியுபோல் மற்றும் வொல்னொவகா நகரங்களில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொள்வதாக இன்று காலை ரஷ்யா அறிவித்தது.
அப்பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறும் வரை மட்டுமே இந்த போர் நிறுத்தம் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷ்யா தற்போது போர் நிறுத்த அறிவிப்பை மீறிவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.