ரஷ்யா 2-வது நாள் போரில் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்தை பிடிக்கும் முயற்சியில் உள்ளன.
ரஷ்ய ராணுவம் முன்னோக்கி வந்த வண்ணம் உள்ள நிலையில், அவர்களிடம் சில நகரங்கள் தானேகவே முன்வந்து சரணடைந்துள்ளன.
உக்ரைன் ராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள், உக்ரைன் ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களில் அதிவேகமாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளனர்.
இதனால் விரைவில் கீவ் நகரை தங்கள் வசப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தன்னை குறிவைத்தே கீவ் நகருக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைகின்றனர் என உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று நடைபெற்றும் சண்டையில் உக்ரைன் ராணுவ விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் இன்று நீண்டதூரம் சென்ற இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கு ஏவுகணை மூலம் ரஷ்யாவின் விமானப்படை தளத்தை தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது உக்ரைன் வீரர்கள் ரஷ்ய வீரர்களுடன் கடுமையாக சண்டையிட்டு வருகிறார்கள்.