உக்ரைனின் மரியுபோல் நகரில் பொதுமக்கள்தங்கள் உயிர்களை காக்கும் நோக்கத்துடன்தஞ்சமடைந்திருந்த தியெட்டர் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
ரஸ்ய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள நகரின் அதிகாரிகள் தியெட்டரின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் அந்த தியெட்டரில் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களிற்கான பகுதியாக அந்த தியெட்டர் அறிவிக்கப்பட்டிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை தியெட்டர் தாக்கப்பட்டவேளை முதியவர்களும் குழந்தைகளும் உள்ளேயிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிலர் அங்கிருந்து தப்பிவெளியேறியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
தியெட்டருக்கு வெளியே ரஸ்ய மொழியில் சிறுவர்கள் என எழுதப்பட்டிருந்ததை மக்சர் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள செய்மதி படங்கள் காண்பித்துள்ளன.
தியெட்டரின் ஒரு பகுதி தரைமட்டமாகியுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.