அண்மையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வானது உலகளவில் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் , மேலும் சில பிராந்தியங்களில் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொவிட் -19 இன் மற்றுமொரு பாரிய எழுச்சி ஒமிக்ரோனால் உந்தப்பட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கலாம்.இருப்பினும் இன்று வரை ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வுடன் தொடர்புடைய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை இவை ஏற்படுத்தக்கூடிய விளைவு தொடர்பில் கணிசமான நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன.எதிர்வரும் வாரங்களில் இப்புதிய பிறழ்வு தொடர்பான மேலதிக தரவுகளை வெளியிட முடியும் என எதிர்பார்க்கிறதுஎன உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தால் , சுகாதார சேவைகளை பராமரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துமாறு உறுப்பு நாடுகளுக்கு WHO அறிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வு தொடர்பில் கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை முன்னெடுப்பதாக WHO இன் பணிப்பாளர் நாயகமான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ட்வீட் செய்துள்ளார்.