• Sun. Jan 12th, 2025

பூமியின் மீது சூரியப் புயல் – நாசா அதிர்ச்சித் தகவல்

Jul 12, 2021

இந்த உலகம் மட்டுமல்ல பேரண்டமும் பிரபஞ்சமும் பெரும் ஆச்சயங்களையும் வியப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

நாள்தோறும் பல புதிய சம்பவங்களும் ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. இதை அறிவியல் விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுகள் மூலம் உலகத்திற்குத் தெரியப்படுத்துகின்றனர்.

இந்நிலையில், பூமியின் மீது சூரியப் புயல் மோதவுள்ளதாக இன்னொரு அதிர்ச்சித் தகவலை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, சூரியப் புயல் ஒன்று பூமியை நோக்கி சுமார் 16 லட்சம் கிமீ வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் இதனால் தொலைதொடர்ப்புக் கருவிகளாக ஜிபிஎஸ், தொலைபேசிச் சிக்னல்கள், சாட்டிலைட் டிவி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைய வாய்ப்புள்ளது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.