• Sun. Jan 12th, 2025

இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலை திறப்பு

Jul 1, 2021

வேல்ஸ் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்ஸ் இளவரசர்கள், அவர்களின் தாய் வேல்ஸ் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளில் சிலை ஒன்றை திறந்து வைத்துள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டில் சகோதரர்களால் ஆணையிடப்பட்ட இந்த சிலை, கென்சிங்டன் அரண்மனையின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சுங்கன் கார்டனில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், அரண்மனைக்கு வருபவர்களுக்கு ‘அவருடைய வாழ்க்கையையும் அவருடைய மரபையும் பிரதிபலிக்க’ இது உதவும் என அவர்கள் நம்புகிறார்கள்.

இந்த நிகழ்வின் மூலம், கடந்த ஏப்ரல் மாதம் எடின்பர்க் இளவரசரின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.

இதேவேளை நிகழ்வுக்கு முன்னதாக தனது தனிமைப்படுத்தலை நிறைவு செய்வதற்காக தனது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் ஹரி கடந்த வாரம் பிரித்தானியாவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.