கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் தைமாதமானது தமிழ் மரபைப் பறைசாற்றும் மாதமாகக் கொண்டாடப்படும் தருணத்தில் இலண்டன் SOAS பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை உறுப்பினர்களால் தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் விழா 15/01/2022 சனிக்கிழமை கொண்டாட்டப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக Nicholas Rogers அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் பல தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இலவச நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த் துறை உறுப்பினர்கள்.