மியன்மார் மீதான ஆயுதத் தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை மதிக்கவும், தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அந்நாட்டு இராணுவத்தை வலியுறுத்தியுள்ளது.
இராணுவ ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்று நான்கு மாதங்களுக்குப் பின்னர் 119 நாடுகளின் ஆதரவுடன் பொதுச் சபை, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
குறித்த தீர்மானத்தை பெலரஸ் மட்டுமே எதிர்த்த நிலையில் சீனா, ரஷ்யா உட்பட 36 நாடுகள் குறித்த வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்த அதேவேளை 37 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
பெப்ரவரி முதலாம் திகதி இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் இராணுவதினரால் 860 க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் மீதான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் எடுத்துரைத்துள்ளது.