• Tue. Dec 3rd, 2024

அச்சுறுத்த வரும் கொரோனாவின் அடுத்த திரிபு – எச்சரிக்கை

Feb 9, 2022

இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது:

இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது. மேலும் சில திரிபுகள் மக்களைத் தாக்க வாய்ப்புள்ளது. கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமைக்ரானைவிட தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும்.

ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு, இந்த புதிய உருமாறிய வகை ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து தெளிவான விளக்கம் ஏதுமில்லை.

அதற்குப் பிறகும் சில திரிபுகள் ஏற்படக்கூடும். அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத்திறன் குறையக்கூடும்.

எனினும், நோய்த் தொற்று ஆபத்தையும் உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

உலகம் முழுவதும் தற்போது கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.