• Fri. Feb 7th, 2025

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்; திடீரென வீட்டுக் கூரை மீது மோதியதால் பரபரப்பு!

Jul 28, 2021

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் வீட்டுக் கூரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரேனில் Prykarpattia மாகாணத்தில் இன்று மதியம் 1.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் நேரடியாக வீட்டில் கூரையின் மீது மோதி நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து விமானம் விழுந்ததும் வீடு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள், மற்றும் வீட்டில் எத்தனை நபர்கள் இருந்தனர் என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.