• Wed. May 7th, 2025

தங்கத்தின் விலை பாரியளவு அதிகரிக்கும் – எவ்வளவு தெரியுமா?

Jun 14, 2021

உலக சந்தையில் எதிர்வரும் மாதங்களில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில் தங்கத்தின் விலையிலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார இறுதி வரையில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸின் தங்கத்தின் விலை 1876.87 டொலராக பதிவாகியுள்ளது. எனினும் அது வாரம் முழுவதும் காணப்பட்ட விலையை விட சிறியளவு விலை குறைவடைந்துள்ளதாகவே கூறப்படுகின்றது.

எப்படியிருப்பினும், அமெரிக்காவில் வருடாந்த பணவீக்கம் 13 ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தை குறிப்பதால் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய வெகு விரைவில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1950 – 1975 டொலர் வரை அதிகரிக்க கூடும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.