அவுஸ்திரேலியாவில் சுமார் ஒரு வருடத்திற்கு அதிகமாக தனது தாயின் பிணத்தை பாதாள அறையில் மகன் வைத்திருந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டின் மேற்கு டைரோல் பகுதியில் வசித்து வந்த 89 வயதான மூதாட்டி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயற்கையாக மரணமானார். ஆனால் 66 வயதான அவரது மகன், தாயின் உடலை அடக்கம் செய்யவில்லை.
மாறாக தனது வீட்டின் பாதாள அறையில் ஒரு வருடத்திற்கும் அதிகமாக தாயின் உடலை ஐஸ்கட்டிகள் மற்றும் பேண்டேஜ்களை வைத்து பாதுகாத்து, துர்நாற்றம் வராமல் தடுத்துள்ளார்.
மேலும் கடந்த ஒரு வருடத்தில் தாயின் ஓய்வூதியத் தொகையாக 50 ஆயிரம் டாலருக்கு (சுமார் ஒரு கோடி) மேற்பட்ட தொகையை பெற்றுள்ளார். புதிதாக அந்தப் பகுதியில் வேலையில் சேர்ந்த தபால்காரர், ஓய்வூதியம் பெறும் அந்த மூதாட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியபோது, அவரது மகன் மறுத்து விட்டார்.
இதனால் சந்தேகம் கொண்ட தபால்காரர் வழங்கி தகவலின் அடிப்படையில் அங்கு பொலிஸார் தேடுதல் நடத்தினர். இதன் போது தாயின் சடலம் பாதாள அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்துகிறார்கள். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.