• Fri. Mar 29th, 2024

உக்ரைன் போர் கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்

Mar 10, 2022

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்தால், கொரோனா காலத்தில் சந்தித்த பொருளாதார நெருக்கடியை விட மோசமான நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் சந்திக்க நேரிடும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சீ.இ.ஓ ஹெர்பெர்ட் டைஸ் எச்சரித்துள்ளார்.

போர் காரணமாக சர்வதேச சந்தையின் முதுகெலும்பாக விளங்கும் விநியோக சங்கிலியில் பெரும் தாக்கம் ஏற்பட்டு பொருட்களின் விலை பன் மடங்கு உயர வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஐரோப்பிய நாடுகள் அதிக பண வீக்கத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

போர் காரணமாக மேற்கு உக்ரைனில் செயல்படும் கார் உற்பத்தி உதிரி பாகங்கள் தயாரிக்கும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், ஃபோக்ஸ்வேகன், பி.எம்.டபிள்யூ, போர்ஷே உள்ளிட்ட நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.