• Fri. Jul 26th, 2024

விண்வெளி பயணம் செல்லும் உலகின் வயதான நபர்

Oct 7, 2021

பிரபல ஸ்டார் டிரெக் தொடரின் நடிகர் வில்லியம் சாட்னர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸூக்கு சொந்தமான புளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 12 ஆம் திகதி நியூ ஷெப்பர்டு 18 விண்கலம் மூலமாக விண்வெளிக்குச் செல்லும் 4 பேர் கொண்ட குழுவில் ஒருவராக வில்லியம் சாட்னரும் செல்கிறார்.

இதன் மூலம் விண்வெளி பயணம் செல்லும் உலகின் வயதான நபர் ஆக இருக்கிறார் வில்லியம் சாட்னர்.