ஜேர்மனியில் மழை வெள்ளம் ஒருபக்கம், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மறுபக்கம் என கைகோர்த்துக்கொண்டு உயிர்களை பலி வாங்கி வருகின்றன.
ஜேர்மனியில் மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததில், 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் 1,300 பேரைக் காணவில்லை.
சாலைகள் வெள்ளக்காடாக, சில இடங்களில் சாலைகளும், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும், சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
Cologneக்கு தெற்கே வீடுகள் பல இடிந்து விழுந்த நிலையில், அப்பகுதியிலிருந்து 55 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். மீட்புக் குழுவினர் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் இன்று North Rhine-Westphalia மாகாண கேபினட் அவசர கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.