உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன. அதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன.
இதனால் ரஷியாவில் இந்த கார்டுகளை பணம் எடுப்பதற்கு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷியாவில் தங்களது ஒளிபரப்பு சேவையை நிறுத்தி உள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ரஷியாவில் எங்கள் பதிவேற்றங்கள் மற்றும் நேரடி ஒளிபரப்பு சேவையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.