ருஷ்ய -உக்ரைன் இடையிலான போர் இன்றும் ஏழாவது நாளாக தொடரும் நிலையில், உக்ரைனின் தென்பகுதியில் உள்ள துறைமுக நகரான கேர்சனை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
எனினும் உக்ரைன் அதிகாரிகள் நகரம் இன்னமும் தமது கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நகரின் மத்திய பகுதியில் ரஷ்ய படையினரும் டாங்கிகளும் காணப்படும் வீடியோவை பிபிசி உறுதிசெய்துள்ளது.