• Sat. Jul 27th, 2024

தியாகத் திரு நாளான ஹஜ் பெருநாள் இன்று!

Jul 21, 2021

அல்லாஹுவின் அருளினால் தியாகத் திரு நாளாம் ஹஜ் பெருநாளை இன்று உலக வாழ் இஸ்லாமியர்கள் உவகையுடன் கொண்டாடுகின்றனர்.

‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாள், இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரும் தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும்.

இஸ்லாத்தின் 5 ஆவது கடமை ‘ஹஜ்’ கடமையாகும்.

தகுதியுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது அவசியமாகும்.

ஹஜ் கடமை ஓர் ஆன்மிகப் பயணமாகும். இதன்மூலம் பெறப்படும் ஆன்மிக அனுபவம், கிடைக்கும் பயிற்சிகள், மனிதனுக்கு இறைநெருக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. இறையச்சம், உளப்பக்குவம், தியாக சிந்தனை, ஒற்றுமை, பொறுமை போன்றவைகளை ஏற் படுத்துகிறது.

இந்த தியாகத் திருநாள், தந்தைதனது மகனை ‘குர்பான்’ செய்வதற்காகவும், மகன் தன்னைத்தானேதியாகம் செய்வதற்காகவும் முன்வந்த தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும்.

இப்ராஹீம் அவர்களும், அவர்களின் மனைவி ஹாஜரா நாயகி அவர்களும், அவர்களின் அருமை மகன்இஸ்மாயீல் அவர்களும் செய்த மகத்தான தியாகத்தை இந்தப் பெருநாள் நினைவுபடுத்துகிறது.

இப்ராஹீம் அவர்கள், தனது மகன் இஸ்மாயீல் அவர்களை அறுத்துப் பலியிட கனவொன்று கண்டார்கள். இறைவனின் கட்டளைக்கு கீழ்படியும் வகையில் தனது அன்பு மகனைபலியிட இப்ராஹீம் அவர்கள் துணிந்தார்கள்.

இப்ராஹீம் அவர்கள் தனது அருமைமகனை அறுத்துப் பலியிட துணிந்தபோது, ஒரு ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான். அவ்வாறே அவர்கள் செய்தார்கள்.

இந்த தியாகத்தின் உச்ச நிலையை முழு உலகிலும் உள்ள இறையடியார்களுக்கு உணர்த்துவதே குர்பானின் நோக்கமாகும்.