• Mon. Nov 18th, 2024

ஜனநாயகம் குறித்த மாநாட்டிற்கு சீனாவிற்கு அழைப்பு விடுக்காத அமெரிக்கா

Nov 24, 2021

ஜனநாயகம் குறித்து காணொளி மாநாட்டில் விவாதிக்க சீனாவில் நடைபெறும் மாநாட்டிற்கு தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

ஊழலுக்கு எதிராகவும், மனித உரிமைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கும் வகையில், இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க சீனாவை அமெரிக்கா அழைக்காத நிலையில், தைவானிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக சீனா – தைவான் மோதல் விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில், சீனாவை மேலும் கோபப்படுத்தும் வகையில் தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.