• Sat. Jul 20th, 2024

ஆயுதக் குவிப்பை ஆரம்பித்துள்ள சீனா – அமெரிக்கா கவலை

Jul 3, 2021

சீனாவின் மேற்கு பாலைவன பகுதியில் ஏவுகணை கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டியதை சுட்டிக்காட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நெட் பிரைஸ், சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களை குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன. இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது’ என கூறினார்.