• Fri. Nov 22nd, 2024

நியூயோர்க் நகரில் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி பாஸ் அவசியம்

Aug 4, 2021

அமெரிக்க நகரங்களில் முதன்முதலாக நியூயோர்க்கில் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி பாஸ் முறை கொண்டு வரப்படுகிறது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், Key to NYC என்ற பெயரிலான இந்த தடுப்பூசி பாஸ் முறை எதிர்வரும் 16 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என நியூயோர்க் நகர மேயர் பில் டி பிளாசியோ அறிவித்துள்ளார்.

அதன்படி உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்பவர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரத்தை காண்பிப்பது கட்டாயமாகும்.

இதுவே தடுப்பூசி பாஸ் என அழைக்கப்படுவதாகவும் மேயர் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பாஸ் வைத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.