• Thu. Dec 5th, 2024

மும்பை டெஸ்டில் 14 விக்கெட்டுகள் எடுத்த அஜாஸ் பட்டேல்

Dec 6, 2021

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடேயில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் நியூசிலாந்து இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் முதல் இன்னிங்சில் 10 விக்கெட், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் என்று இந்த டெஸ்டில் மொத்தம் 225 ரன்கள் வழங்கி 14 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு வீரரின் சிறந்த பந்துவீச்சு இது தான்.

இதற்கு முன்பு 1980-ம் ஆண்டு இங்கிலாந்தின் இயான் போத்தம் இதே மும்பை ஸ்டேடியத்தில் 106 ரன் விட்டுக்கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தியதே இந்தியாவுக்கு எதிராக ஒரு வீரரின் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. அவரது 41 ஆண்டு கால சாதனையை தற்போது அஜாஸ் பட்டேல் முறியடித்துள்ளார்.