• Sat. Jul 27th, 2024

விராட் கோலி படைத்த சாதனை

Dec 6, 2021

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

இதில், இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில், 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதற்கு முன் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், சர்வதேச அளவிலான கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் விராட் கோலி 50 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்காக பி.சி.சி.ஐ. அமைப்பு கோலிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளது. இந்த வெற்றியையடுத்து,

வருகிற 26ந்தேதி நடைபெற உள்ள போட்டிகளுக்காக கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறது.