• Sun. Dec 8th, 2024

இலங்கையை பந்தாடிய பட்லர் : 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

Jun 24, 2021

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பிறகு விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், 17.1 ஓவர்களில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்த பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 2வது டி20 இன்று நடைபெறுகிறது.