• Sat. Jul 20th, 2024

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து : கடைசி நிமிடத்தில் ரொனால்டோ அடித்த கோல்

Sep 30, 2021

கிறிஸ்டியானா ரொனால்டோ கடைசி நிமிடத்தில் அடித்த கோல் உதவியுடன் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது .

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் வில்லாரியல் அணியும் மோதின .ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தியது .

இதனால் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் வில்லாரியல் அணியின் பாக்கோ அல்காஸர் 53 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். எனவே வில்லாரியல் அணி 1-0 என முன்னிலை பெற்றது .

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 60 வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் அலெக்ஸ் டெல்லஸ் ஒரு கோல் அடித்தார் . எனவே இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

ஆட்டத்தில் கூடுதலாக 5 நிமிடம் வழங்கப்பட்டது . இதில் கடைசி நிமிடத்தில் கிறிஸ்டியானா ரொனால்டோ ஒரு கோல் அடித்தார் .

இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது .