எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, UAE-ல் தங்களது கட்டாய ஆறு நாள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்து விட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2021) 14 வது சீசனின் இரண்டாம் கட்டம் துவங்க உள்ள நிலையில், CSK அணி தங்களது முதல் பயிற்சி அமர்வைத் துவக்கியது.
இதற்கிடையில், நெட் பயிற்சியின் போது, எம்.எஸ். தோனி (MS Dhoni) பந்தை அனாயாசமாக அடிப்பதைக் காண முடிந்தது.
இது கண்டிப்பாக மற்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்திருக்கும். வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில், தோனி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவது காணக்கிடைத்தது.
சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ். தோனி, மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடினார்.
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 2021 (IPL 2021) போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்படுவதற்கு முன்பு சிஎஸ்கே அணி, புள்ளிகள் அட்டவணையில் இரண்டாவது இடத்தில் இருந்தது.
இது தற்போது தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட போட்டிகளில், CSK வீரர்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கும்.
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, சிஎஸ்கே தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோவை பகிர்ந்த நிலையில் அணியின் முதல் நெட் பயிற்சியின் வீடியோவைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.